Friday, June 20, 2008

ரெஜிஸ்ட்ரி ட்வீக் 1 - கணிணியில் ஒரு டிஸ்க் ட்ரைவை மறைய வைப்பது எப்படி?

'My Computer'-ஐ திறந்தால், உங்கள் கணிணியில் உள்ள எல்லா ட்ரைவ்களும்(A: , C: , D: ...) தெரியும். இவற்றுள் ஏதேனும் ஒரு ட்ரைவை மறைக்க என்ன வழி என பார்க்கலாம்.

உதாரணமாக ப்ளாப்பி ட்ரைவ்.
பெரும்பாலும் இன்றைய கணிணிகளில் ப்ளாப்பி ட்ரைவ் என்ற ஒன்று தேவையில்லாதாதாக ஆகி விட்டது.கணிணியில் இருந்து ப்ளாப்பி ட்ரைவை நீக்கிய பிறகும் "Folder View"ல் அதன் ஐகான் தெரியும்.நாம் தெரியாத்தனமாக அதை க்ளிக் செய்து விட்டால் கொஞ்ச நேரம் கழித்து " Please Insert Disk in A;\" என்று ஒரு செய்தி வந்து கடுப்பேற்றும்.

ரெஜிஸ்ட்ரி மூலமாக இதை தடுக்க நீங்கள் செய்ய வேன்டியது...

எச்சரிக்கை: ரெஜிஸ்ட்ரியில் கை வைப்பது ஆபத்தானது. ஏதேனும் தவறு நிகழ்ந்தால் கணிணி செயலற்று போக வாய்ப்புகள் அதிகம். எனவே ரெஜிஸ்ட்ரியை backup எடுப்பது, மற்றும் Restore செய்வது எப்படி என்பதை இங்கே சென்று தெரிந்து கொள்ளவும்.


1.Start->Run -ஐ க்ளிக் செய்து regedit என டைப் செய்யவும்.உங்கள் கணினியின் ரெஜிஸ்ட்ரி திறந்து கொள்ளும்.


2. இதில் HKEY_CURRENT_USER \ Software \ Microsoft \ Windows \ CurrentVersion \ Policies \ Explorer என்ற பாதைக்கு செல்லவும்





3. வலது பக்க விண்டோவில் right click செய்து New->BinaryValue என செலக்ட் செய்யவும்."New Value #1" என்ற புதிய Value ஒன்று உருவாகும்.






4. அதற்கு NoDrives என பெயரிட்டு, பின் அதை டபுள் க்ளிக் செய்து "01 00 00 00" value தரவும்.



இப்போது உங்கள் கணிணியை 'ReStart' செய்து, பின் 'MyComputer' ஐ திறந்து பார்த்தால் உங்கள் ப்ளாப்பி ட்ரைவ் ஐகான்(A:) மறைந்து விட்டதை உணரலாம்.

கணிணியை Restart செய்யாமல் இந்த மாற்றத்தை நாம் தெரிந்து கொள்ள ஒரு வழி உள்ளது. TaskManager சென்று Process Tab ஐ க்ளிக்கவும். 'explorer.exe' ஐ Right CLick-->EndProcess செய்யவும்.
மீண்டும் அதை கொண்டு வர TaskManager ல் File Menu ->New Task சென்று explrer.exe என டைப் செய்து ஓகே தரவும். இப்போது 'MyComputer' ஐ பார்த்தால் ப்ளாப்பி ட்ரைவ் ஐகான் (A:) மறைந்து விட்டதை உணரலாம்.

Seja o primeiro a comentar

Geek Stuff In Tamil © 2008. Template by Dicas Blogger.

TOPO